About Me

மணிமேகலை சிறைக்கோட்டம்

WELCOME TO MESSAGE:
    தமிழ் இலக்கியம் :  மணிமேகலை
    சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை

1முதியால் திருந்துஅடி மும்மையின் வணங்கி 

மதுமலர்த் தாரோன்  வாங்கினோம் கூற 
ஏடு அவிழ் தாரோய்!எம்கோ மகள்முன்    
நாடாது துணிந்து ,நா நல்கூர்ந்தனை என 
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் 
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்--
உதய குமரன் உள்ளம் கலங்கிப் 
பொதிஅறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி 
அங்கு --அவள்--தந்திரம் அயர்ப்பாய் என்ரே 
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்;
பை அரவு --அல்குல் பலர்பாசி களையக் 
கையில் இந்திய பாத்திரம் திப்பியம் ;
முத்தை முதல்வி அடிபிழைத் தாய் எனச் 
சித்திரம் உரைத்த இதூ உம் திப்பியம்;
இந்நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் 
பின் அறிவாம் ,எனப் பெயர்வோன் -தன்னை -16
பொருள்:
மது நிறை மலர் மாலை அணிந்த உதய குமரன் 
சம்பாபதியின்  செவ்விய திருவடிகளை  மூன்று முறை  வணக்கம் செய்து,
"மணி மேகலையை இங்கு விட்டுச் செல்லேன் !'என்று வஞ்சினம்  கூறி முடித்தான் 
அப்பொழுது ,"இதழ் விரியும் மாலை அணிந்த மன்னன் மகனே !எம்முடைய  தலைவியின் முன்னர் சிந்தியாது துணிவோடு வஞ்சினம் கூறி நா வறுமையுற்றாய்!"
என்ற உரை எழுந்தது.சிட்ப கலா வல்லுநரால் அற்புதமாகச்  சமைக்கப்பட்டு வேலைப்பாட்டுடன் விளங்கிய  சிறந்த  சித்திரத்தில் அமைந்த தெய்வப்பாவையே  அவ்வாறு பேசியது .அதனை செவிமடுத்த இளவரசன் உள்ளம் கலங்கினான் ;
காற்றோட்டமில்லாத நிலவறையில் அகப்பாட்டாற் போல  உடல் வருந்தினான்.
முன்னொரு நாள் 'மணிமேகலை  மேற் கொண்ட  விருப்பத்தை மறப்பாய்!'
என்று செங்கோல்  முறைமையை எடுத்துக்காட்டிய  தெய்வம் கூறியதும் வியப்புக்குரியது! பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடைய மணிமேகலை  பலருடைய பசியையும் களைவதற்கு கையில்  எடுத்த அமுத சுரப்பி  எடுக்க எடுக்கக்  குறைவில்லாது வளர்ந்து சோறு பொழிவதும் வியக்கத்தக்கது. எம்முடைய தலைவியின் திருவடியில்  பிழை புரிந்தாய் !'என இச்சித்திரப்பாவை கூறியதும் அன்றோ?இவற்றின் உண்மைத்தன்மையை  எல்லாம்  இளங்கோடியாகிய மணிமேகலையை  அடைந்த பிறகு அறிவோம்!!!" என எண்ணி உதய குமரன்   அங்கிருந்து  புறப்பட்டான்.  


17ரிலிருந்து 28 வரையினுள்ள அடிகளின் பொருள் :

"அகழ்வாய் ஞ்ஞாலம்  ஆரிருள்  உண்ணப் "

இடம் அகன்ற பூமியைக்  காரிருள் உண்ணுவதற்காக பகலெல்லாம் அரசாண்ட  பரிதி  மன்னனை ஓடச் செய்துவிட்டு  இரவாகிய கரிய  யானை  வருகிறது.

கதிரவனைப் புறங்காட்டி ஓடச் செய்த அந்த இரவு யானையின் வெற்றியைப்  
பாராட்ட  பறையொலி எழுகிறது.அந்திக் காலமாகிய ந்தெறியும் ,வானத்தில் தோன்றிய  பிறைத் திங்களைத் தந்தமுமாகக் கொண்டு பாகன் எவருமின்றி ,விருப்பத்தால் துதிக்கையை நீட்டி ,வந்து மொய்க்கும் வேங்கை மலரின் மணம் பொருந்திய மதநீரைச் சொரிந்து தருக்குற்று காவலைக் கடந்து காற்றுப் போல எழுந்து மீண்டு செல்லும்  உதய குமரனைத் தொடர்ந்து சென்றது.
மாலை மயங்கும் வேளை !புகார் நகரத்து  நம்பியர் வேலைக்கார நங்கையரோடு  மகர் யாழின் கிளை  நரம்புகளை முறைமையாக  மீட்டி இனிய தாளத்தோடு பொருத்தி காதல் இசை எழுப்பினர்.அந்த காதல் பண்  கூரிய வேலைப்போல் உதய குமரனின் உள்ளத்தைத் தாக்கிக் கிழித்தது;இன்ப வேட்கையை அடக்க முடியாத உள்ளத்தில் புகைந்து கொண்டிருந்த  காமம்  பெரு நெருப்பாக மூடப்பட்டது.காமத்தீயின் சூட்டைப் பொறுக்க ஆற்றல் இல்லாதவனாய்  கொல்லன் துருத்தியைப்போல் உதயகுமரன்  நெடுமூச்செறிந்து சென்றான்.

29ரிலிருந்து 40வரையுள்ள அடிகளின் பொருள்:

"உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட"

சம்பாபதி உறையும்  சிறிய கோயிலில் வேற்று வடிவம் கொண்ட  மாசற்ற பண்புள்ள மணிமேகலை, 'மாதவி மகளாகவே  ஊரம்பலத்தில்  சுற்றிக் கொண்டிருந்தால் என்னை அடைய விரும்பும்  மன்னன் மகன் கைவிடாது என்னைப் பற்றுவான்,"என்று சிந்தித்தாள்."எனவே ,நகர மக்கள் எல்லோராலும்  நன்கு அறியப்பட்ட  யானைத்தீ  என்ற பசிநோயால்  வாடும் காய சண்டிகை  உருவத்திலேயே இருப்பேன்;

துணையற்ற வறியோர்க்கு  துன்பம் தீர்க்கும் துணையாவேன்.இறப்போர் ஏற்றாலும் அவர்கட்குச்  சோறிடுதலும்  நான் மேட்கொண்ட அறத்தின் கடமை ஆயினும்,'வறியோரை தேடித்  வலிந்து கொடுத்தலே விழுமிய சிறப்பு!"என கல்வியிட் சிறந்த சான்றோர் ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்!''எனக் கருதினாள்.பசுமையான  வளையல் அணிந்த நங்கை நல்லாள்  மணிமேகலை சம்பாபதியின் கோயிலின் உள்ளே  இருந்த அமுத சுரப்பியை  கையில் எடுத்துக் கொண்டு,

41ரிலிருந்து 50வரை உள்ள அடிகளின் பொருள்:

"பதிஅகம் திரிதரும் பைந்தொடி நங்கை"
 பசிப்பிணியைப்  போக்க ஊரெங்கும் சுற்றினாள்.பின்னர் ஒலிக்கும் வீரகழல் அணிந்த  அரசனுக்கும்,நகர பெரியோருக்கும் பிழை செய்தாரை தண்டித்து விதித்த தண்டனையை  நிறைவேற்றும் சிறைச்சாலையினுள்ளே மணிமேகலை ஆர்வத்தோடு சென்றாள்.அங்கே கொடிய பசியால் வாடிப்  பெரு மூச்செறிந்து வாடும் ஆருயிர் மக்களுக்கு  அவர்கள் ஏற்கும்  காய் வருந்து ன்மாறு  வாரி வாரி உணவு வழங்கினாள்."பலருக்கும் உணவு அளித்த பாத்திரம் ஒன்றே,!!!எடுக்க எடுக்க குறையாது சோறு போடுகிறதே!!!" என்று  சிறைக்காவலர் வியந்தனர்.அமுத சுரப்பியின் கொடைத் திறத்தையும் அதை யுடைய காயசண்டிகை (மணிமேகலை)யின் செய்தியையும் அரசர் பெருமானுக்கு உறுதியுடன் வியக்க  வியந்தனர்.

51லிருந்து 60 வைத்து வரை உள்ள அடிகளின் பொருள்:
முன்னொரு நாள் திருமால்  கூறிய வடிவ முடைய வாமனனாகத் தோன்றிப் பின் பேருருவமாய்த் தோற்றமெடுத்துத்  தன் ஈரடியால் வானையும் நிலத்தையும் அடக்க மூன்றடி, மண் நீர் வார்த்துக் கொடுத்த வலிய பெருவில்லுடைய  மாவலிப் பேரரசனின் வழித் தோன்றலாகிய பாணகுலத்தரசனின் புகழ் மிக்க திருமகளாகிய 'சீர்த்தி' என்னும் திருத்தகு மாதேவியுடன் கிள்ளிவளவன்,பூக்கள் மலர்ந்து எழிலுடன் விளங்கும் பூம்பொழிலில்  விளையாடச் சென்றிருந்தான்.பூச்சோலையில் மணம் கமழும் மலர்  பந்தர்!மலர்ப்பந்தலில் கொம்புகளில்  உள்ள தும்பிகள் வேய்ங்குழல்  இசைக்கின்றன;சோலை வண்டுகள் நல் யாழ்  வாசிக்கின்றன;கானக்குயில்கள் வரிப்பாட்டு பாடுகின்றன;கோலா மயில் தொகை விரித்து ஆடுகின்றன;பூங்கொடி படர்ந்து  எழிலில் திகழும்  மலர்பந்தரையும்,புட்கள் பாடி ஆடும் நேர்த்தியையும்  கண்ட வேந்தனின்  மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.   




வாழ்க செந்தமிழ் !!!        வாழிய நற்றமிழர் !!!      வளர்க தமிழ் !!!

  


Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page