About Me

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு

we are all human beings. please live your life.








முன்னுரை:
இன்றைய காலகட்டத்தில் வேலை அறை கிடைப்பது என்பது ஒரு கனவாக இருக்கிறது மற்றும் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது ஒரு அற்ப விஷயமாக கருதப்படுகிறது.
ஆனால் இவை எல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான் ஏனெனில் ஒரு சில ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தோமேயானால் நமது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்கள் சிறந்த வேலைவாய்ப்பு திறமையை பெறவில்லை என்பதே வெளிப்படையான உண்மை.
ஆதலால் நாம் வேலைக்கு என நாம் அவர்களை தயார் படுத்தி கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று.
அதிலும் குறிப்பாக குடும்ப சூழ்நிலைகளை சமாளிப்பது இயல்பாக நமது இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.



போட்டித் தேர்வுகள்
பொதுவாக இந்த போட்டி தேர்வுகள் என்றால் என்ன ஏன் இது தற்பொழுது அதிக கவனம் பெற்றவை ஆகும் மற்றும் மிகுந்த வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறையாகவும் மாறி இருக்கிறது.
மேலும் இந்த போட்டித் தேர்வுகளின் மூலம் பல மாணவர்கள் அதிக செலவு செய்து இந்திய ஆட்சிப் பணி தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மற்றும் இன்னபிற தேர்வுகளுக்கும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்கின்றனர்.

ஆனால் இக்கால கட்டத்தில் நம் மாணவர்களுக்கு கடின உழைப்பை நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எல்லாம் நம்  உள்ளங்கையில் அடங்கி விடுகிறது ஒரு சிறிய உபகரணம் மூலம் நாம் சில காரியங்களை  மற்றும் சில தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம்.

முதலில் போட்டித்தேர்வுகள் ஏன் நடத்தப்படுகிறது மற்றும் அதற்கான தேவை என்ன என்பதை காண்போம்.


ஒரு வேளைக்கான சிறந்த நபரை தேர்ந்தெடுக்க அவர் மற்றவர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு சிறந்த மற்றும் சூழ்நிலைக்கு தகுந்த முடிவுகளை எடுக்கிறார் என்பதை நிரூபிக்க போட்டித்தேர்வுகள் பொதுவாக நடத்தப்படுகிறது.

போட்டித் தேர்வுகள் ஒன்றும் தனி மனித ஆற்றலை நிர்ணயித்து விடாது என்பது உண்மைதான்.


ஆனால் நாம் இங்கு குறிப்பாக காண வேண்டியது என்னவென்றால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுவும் குறிப்பாகவறுமையில் இருக்கும் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு?

முதலில் எந்த  அமைப்புகள் இந்த போட்டி தேர்வுகளை நடத்துகின்றன.
மேலும் அந்த அமைப்புகள் நடத்தும் தேர்வுகளில் அறிக்கைகளை நாம் மிக கவனத்துடன் அறிந்திருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் விண்ணப்ப தேதி மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி இவற்றையெல்லாம் நாம் அறிந்து அதற்கு முன்னரே அதற்கு தேவையான ஆவணங்களை சரிபார்த்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது எல்லா இடத்திலும் கணினி மயமாகி விட்டதால் நாம் வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் நமது பள்ளி கல்லூரி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துவிடலாம்.
அதற்காக நாம் முன்னரே நமது ஜிமெயில் அக்கவுண்ட் களில் நமது சான்றிதழ்களை எல்லாம் ஸ்கேன் செய்து எடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஏன் ஸ்கேன் செய்ய வேண்டும்?
ஏனெனில் நீங்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பொழுது நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ள படத்தை தான் உள்ளிட முடியும்.
அதனை சில ஸ்கேனர் செயலிகள் மூலம் தான் நாம் ஸ்கேன் செய்ய முடியும்.


ஆகையால் நாம் முன்னரே குறிப்பாக எல்லா தேர்வுக்கும் பொதுவாக தேவைப்படக்கூடிய பத்தாம் வகுப்பு சான்றிதழ் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் மேலும் கல்லூரி பயின்று இருந்தால் கல்லூரி பட்டச் சான்றிதழ்,
சாதி சான்றிதழ்,
உங்களின் புகைப்படம் அதாவது ஆறு மாததிற்கு முன் எடுத்த புகைப்படம்.
உங்களின் கையொப்பம்.
(அதாவது நீங்கள் ஒரு வெள்ளைத்தாளில் உங்களது கையெழுத்திட்ட அந்த படத்தை உள்ளிட வேண்டியிருக்கும்)

ஆகையால், அதனையும் நீங்கள் முன்னரே செய்து வைத்திருக்க வேண்டும்.


அதற்கு பின்பு நீங்கள் இணைய வழியில் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.

மேலும் நீங்கள் சுயமாகவே விண்ணப்பங்களை பூர்த்தி செய்கிறீர்கள் என்றால் நீங்கள் அதிக கவனத்துடன் உங்கள் பெயர்
,
ஆதார் அட்டை,
பான் அட்டை மற்றும் தேவைப்படும் ஆவணங்களை முன்னரே ஸ்கேன் செய்து இதுமட்டுமல்லாமல்,
நீங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பொழுது உங்களது பெயர் மற்றும் சாதி சான்றிதழில் உள்ள எண் பிறந்த தேதி உங்களின் தந்தை பெயர் உங்களின் கல்விதகுதி அவற்றை சரியான முறையில் இருக்கிறதா என்பதை அதிக கவனத்துடன் உற்றுநோக்கி பூர்த்தி செய்ய வேண்டும்.



போட்டித் தேர்வுகளுக்கு என்ன படிக்க வேண்டும்?

நீங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களாக இருந்தால்,
முதலில் நீங்கள் உங்களது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்,
அந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக ளுக்கு. எப்படி நீங்கள் உங்களை தயார் செய்து கொண்டிருந்த அளவிற்கு கவனத்துடன் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.


முதலில் நீங்கள் எழுதும் போட்டி தேர்வுக்கான பாடத் திட்டத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருத்தல் அவசியம்.
அதற்கு பின்பு நீங்கள் அந்த பாட திட்டத்தை முழுமையாக மனதில் நிறுத்தி நிதானமாக படித்து மனனம் செய்து வைத்திருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் நீங்கள் படிக்கும் பொழுது நீங்கள் படிக்க கூடிய அந்த நிகழ்வு எங்கே வருகின்றது என்பது உங்களுக்கு மிக தெளிவாக தெரியும்.
மேலும் தேர்வு எழுதும் பொழுது நீங்கள் பதட்டத்தை தவிர்க்கலாம்.




அதற்கு பின்பு பொதுவாக நாம் தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்றால் நாம் முதலில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை நம்மிடமிருந்து வைத்திருத்தல் வேண்டும்.


பாட புத்தகங்களை எல்லாம் நம்மிடம் இருப்பதை உறுதி செய்த பின்பு நாம் படிக்க தொடங்க வேண்டும்.


எவ்வாறு படிப்பது?

நீங்கள் உங்கள் பள்ளிகளில் நன்றாக படித்த அனுபவம் இருந்தால் நீங்கள் நன்றாக படிக்கும் மாணவராக இருந்தால் அது இந்த போட்டித் தேர்வுகளில் செல்லுபடி ஆகாது.

ஏனெனில் இதற்கென ஒரு தனி தயாரிப்பு தேவைப்படுகிறது.
ஒரு தனி மனநிலையும் தேவைப்படுகிறது.
மேலும் நீங்கள் உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம்.
படிப்பதற்கு முன் பாடத்திட்டத்தை நன்றாக படித்து விட்டு இப்பொழுது உதாரணமாக வரலாறு படிக்கிறீர்கள் என்றால் அவற்றை தொடர்ச்சியாக படிக்க வேண்டும்.
ஏனெனில் இது இது உங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி விடும்.

நீங்கள் படிக்கும் பொழுது எதையும் மனனம் செய்து விடக்கூடாது புரிந்து படித்தல் அவசியம்.


புரிந்து படிப்பது என்றால் எப்படி,

இப்பொழுது நீங்கள் வரலாறு படிக்கிறீர்கள் என்றால் அதை நீங்கள் ஒரு கதை நோக்கில் புரிந்து கொண்டால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


நீங்கள் புவியியல் படிக்கிறீர்கள் என்றால் அதை தற்போது நிகழும் காலநிலை மாற்றங்கள் மற்றும் செய்திகளில் வரும் மழை தொடர்பான வலிமண்டல செய்திகளை நீங்கள் படிப்பதோடு ஒப்பிட்டு கொண்டால் மேலும் உங்களுக்கு நன்றாக புரியும்.


இவ்வாறு அந்த நீங்கள் அதாவது நீங்கள் படிக்க கூடிய போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் கொடுக்கப்பட்ட பாடங்களை இவ்வாறு பள்ளி புத்தகங்களில் இருந்து நீங்கள் படித்துக் கொண்டு வருவது முக்கியம்..



அதற்குப் பின்பு நீங்கள் தினமும் செய்தித்தாள் வாசிப்பதை உங்கள் தினசரி பழக்க வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீங்கள் ஒரு அரசு அலுவலராக இருக்கும் பொழுது உங்களுக்கு உங்களைச் சுற்றி நடக்கும் செய்திகளை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.


அதுமட்டுமில்லாமல் நீங்கள் செய்தித்தாள் படித்தால் தான் நீங்கள் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

அந்த நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள குவியலாக இருக்கலாம் வரலாறாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு பாடமாக இருக்கலாம் நீங்கள் அதனை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானது.


ஏனெனில் செய்தித்தாள்களில் நீங்கள் படிக்கப் படிக்க உங்களுக்கு உங்களின் பாடத்திட்டமும் நன்றாக புரிய வரும்.

உதாரணத்திற்கு அரசு திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடு எவ்வாறு இருந்தது என்பதை புரிந்துகொள்ள செய்தித்தாள் படிப்பது மிகவும் அவசியம்.


மேலும் நீங்கள் தனியாக படிக்கும் நபர்கள் என்றால் நீங்கள் படிக்கும் பொழுது அல்லது படித்த பின்பு அன்றைய நாளில் என்ன படித்தீர்கள் என்பதை நீங்கள் தேர்வு வைத்தோ அல்லது குறிப்பு நிச்சயமாக எடுக்க வேண்டும்.

அப்பொழுதுதான் நீங்கள் படித்ததை நீங்கள் மறுமுறை படிக்கும் பொழுது எளிமையாக இருக்கும்.


மேலும் பாடங்களை படிக்கும் பொழுது கலந்து படியுங்கள் ஏனெனில் நீங்கள் ஒரு மணி நேரம் படிக்கிறீர்கள் என்றால் அதில் 40 நிமிடம் தான் உங்களது கவனம் படத்தில் இருக்கும் பின்பு உங்களின் கவனம் சிதறும் அதனால் அவ்வப்பொழுது ஓய்வெடுத்து இடைவெளிவிட்டு படிக்க வேண்டும்.


நீங்கள் முழு நேரமாக படிக்கும் மாணவர்கள் என்றால் தினமும் 8 மணி நேரம் படிப்பது என்பது மிகவும் உபயோகமாக இருக்கும்.



போட்டித் தேர்வுகளை நடத்தும் அமைப்புகள்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் பொதுவாக எல்லோரும் எதிர்கொள்ளும் தேர்வுகள் ஆன


TNPSC group 1 group 2 group 2a group 4 and subject based and sector base examinations.

Tnpsc website :http://tnpsc.gov.in/


Tamilnadu police exams website







These include IAS IPS IRS IFS and more and some requirements also available.



RRB:




Railway exams are conducted in RRB board that will be e changed in common entrance test in government latest decision.



SSC.  WEBSITES




IBPS CLERK/ PO EXAMS:



SBI BANK EXAMS






இதையெல்லாம் நீங்கள் கூகுள் வலைத்தளத்தில் தேடினாலே உங்களுக்கு தெரிந்து விடும்.

போட்டித் தேர்வு என்பது நீங்கள் இறுதிவரை ஓடும் ஒரு பாதை நீங்கள் உங்களை எப்படி தயார் படுத்திக்கொண்டு தேர்வை அணுகுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களது வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.




***தேர்வு எழுதும் மாணவர்கள் அந்த தேர்விற்கான பாடத்திட்டம் தேர்வு அறிக்கைகள் மற்றும் அந்த தேர்வு நடத்தும் அமைப்பின் வலைதளத்தை தினமும் கவனித்து வருவது மிகவும் சிறந்தது மற்றும் பயனுள்ளது.

அப்பொழுது தான் உங்களுக்கு எல்லா தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும்.






Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page