About Me

எழுத்தின் தேவை

we are all human beings. please live your life.

எழுத்தின் பிறப்புகள் எங்கிருந்து தொடங்குகிறது கூறுங்கள் நண்பர்களே பார்க்கலாம்.
ஏனெனில்,எழுத்தின் பிறப்பு என்பது அது உற்பத்தியாகி வெளிப்படும்  இடத்தைப் பொறுத்துள்ளது.
ஒரு சொல் என்பது சாதாரணமானது அல்ல  அவைகள் கூட்டாக ஒன்றிணைந்தால், 
ஏற்படும் நிகழ்வு என்பது  இன்றியமையாத ஒன்று.
அப்படிப்பட்ட எழுத்துக்கள்,  இந்த சமூதாயத்தை நல்வழியில் கொண்டுச் செல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
இன்றைக்கு, இதை 
நாம் நம் அடுத்த சந்ததிகளான  மழலைச் செல்வங்களிடத்தில் கொண்டுச் செல்ல வேண்டிய 
கட்டாயத்தில் இருக்கிறோம்.ஏனெனில், அவர்களின் விரல்நுனிகள் தொடுவதெல்லாம் அதிநவீனச் சாதனமான தொலைபேசியைத்தான். அதில் அவர்கள் கழிக்கும் நேரங்களை நாம் மாற்று வழியில் கொண்டு செல்வதற்கு ஒரே வழி, அவர்களின் படைப்பாற்றல் திறனை நாம் வெளியே கொண்டு வர வேண்டும்.


ஏனெனில் எழுத்துக்களின் பிரதிபலிப்பை நீங்கள் அவற்றை 
பயன்படுத்தும் முறைகளிலிருந்தே கண்டு அறிந்து கொள்ளலாம்.
 எந்த ஒரு எழுத்தாளனிடம்  சமூகப்பற்று இல்லையோ அவர்களின்  எழுத்துக்களால் என்ன பயன்?


ஏனெனில் நாம் இந்தச்   சமூதாயத்தில் செய்ய வேண்டிய  மாற்றங்கள் நிறையவே மிகுந்து காணப்படுகின்றது.
ஆகையால் ,
இவற்றைஎல்லாம்  தனி ஒரு மனிதனாக செய்து முடிப்பது 
என்பது இயலாத காரியம்.ஆகையால் நாமொன்றினைந்து 
செயல்படவேண்டிய தருணம் இது.

நான் இங்கு எழுத்துக்களுக்கு இலக்கணம் அளக்க வரவில்லை.
அது என் வேலையும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாம் அவற்றைக்கொண்டு தான் பலவிதமான முன்னேற்றங்களை கொண்டுவர முடியும்.

உதாரணமாக 18 வயது வரை நாம் நடப்பது ஓடுவது எல்லாம் நம் எலும்புகளின்  ஊட்டத்தை அதிகப்படுத்தும்.ஆனால்,தற்போது 
நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளது.
அவர்களின் (மழலைச் செல்வங்களின் )  
கைகளில்  இருக்கும் ஒருபெட்டி  அவர்களை மட்டும்  அல்ல இந்த உலகத்தையே  கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.


"எந்த ஒரு செய்தியை நாம் அதிகம் பேசுகிறோமோ அப்பொழுது தான்  அந்தச்செய்தி உத்வேகமடைந்து  பல மாற்றங்களை உண்டுச்செய்யும்" 



"ஒன்றிணைந்துப் படைப்போம் ஒரு புது உலகுக்கான மாற்றத்தை"

சரி நண்பர்களே,இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்.

Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page