About Me

ஒரு நாள் நிகழ்வு | சிறுகதை | Akthar Rumi 03



காகா  என காகம் கரைய  அன்றைய பொழுதும் விடிந்தது.விழித்த  கண்களைக்  கசக்கி  விழித்தான்.வெளியில்  வரண்டாவில் சித்தி  பிள்ளைகள்  விளையாட  அதைக்கண்ட  அவனுக்கு  ஏதோ  தோன்றியது? 



டேய்...
இப்பத்தான்  ஏந்திருச்சியா! போய்,  பல்லை விலக்கிட்டு சாப்டு. 
 ஆ ,ஆ  என்றபடி மண்தரையில் காலைவைத்து  .தண்ணீர்த் தொட்டிக்கு  அருகில்  சென்றான்.
"பாசி " சுற்றிலும் பரவி இருந்தது.
மேலே  ஏறும்போது  நினைத்தான்  ஒரு கனம்  இது என்ன   நம்ம
 ஊரா  அங்க  தான்  "பில்டிங்", உள்ளேயே  எல்லாம். ஆனால் 
எப்போதும் மாத "லீவுக்கு"  செல்லும்  ஊருக்கு  வருவது ஒரு சோகம் தான்.
 ஏதோ  ஒரு ஆனந்தம்.

புதிதாக! கட்டிய தொட்டி  பக்கத்திலேயே  குளியலறை , அறையிலிருந்து  குளித்து 

 வெளியே  வரும் மாமன் "மகளைக் ",
கண்டதும்  ஒரு  சிறிய  சந்தோசம்  ஆனால் , வெக்கம்  அவனை தலைகுனிய  வைத்தது.அவள் மிதமாக நடந்து உள்ளே ச் சென்றாள் . அவள் நடையை ரசித்த  வாறே பள்ளைத்துலக்கிக் 
கொண்டு இருக்கும் போதே  எவ்ளோ நேரம்  மூச்சு  புடிச்சிட்டு இருக்குற  சீக்கிரம்  விலக்கிட்டு வா போனோமா ! வந்தோமா இல்ல ;என்று   அடுப்பை  எறியவிட்டுக்கொண்டு இருந்த பாட்டியின் சத்தத்திற்கு  ;"தோ" வந்துட்டேன் ! என்று வாய்க்கொப்பளித்து  வந்தான்
" (இன்னும் விலக்கி கொண்டுதான் இருக்கிறான் )"

தோ ! வந்துட்டேன்!என்று  வந்தான்.
வந்து நாற்காலியில் அமர்ந்து பார்த்தான் பாட்டியை ! போயி சாப்ப்டு 


முதல் மருமகளின் பெயரைக் குரல் கொடுத்து இவனுக்கு வைச்சுக் கொடு என்றாள் பாட்டி. "வாப்பா"  என்று உள்ளே அழைத்து  உட்கார வைத்து அன்பாக  தட்டில் வைத்த  இட்லியில் மனம் நிறைந்தது ,பிறகு  என்ன சாப்பிடுவது என்று பார்த்தான் அத்தையை, 

உடனே அத்தை  என்ன பாக்குற ! "வெட்கப்படாம சாப்டு" என்று மேலும்  கைப்புடியில்  சிக்கிய இட்லியை  அவன் தட்டில்  வைத்து  சாம்பாரை ஊற்றிச் சென்றாள் அத்தை.

இவையெல்லாவற்றையும்  கவனித்த  அத்தை  மகளை  கண்டுக்கொள்ளாமல்  சாப்பிட்டுவிட்டு  பக்கத்து  வீடுத் தள்ளி  இருக்கும் பெரியம்மா வீட்டுக்கு  சென்று  பேசிவிட்டு  அவன்  பாலிய சிநேகிதன் 
அதாவது அந்த ஊரிலேயே  வேறு யாரையும்  தெரியாததுப் போல்  அவன் பெரியம்மா  மகனோடு  சேர்ந்துத்தான்  சுற்றுவது விளையாடுவது.

சொந்தம்  என்றாலே  சில  பல  சல சலப்புகள் இருக்கத்தான்  செய்யும்.

பாட்டி வீட்டிற்கும் பெரியம்மா  வீட்டிற்கும் !





அத்தைக்கு மொத்தம்  மூன்று மகள்கள், பெரியம்மாவிற்கு  மூன்று  மகள்கள் ,
 ஒரு ஆண் பிள்ளை.(பாலிய சிநேகிதன்)  மூத்தவளுக்கு  திருமணம் ஆகிவிட்டது. 
சித்திகள் இரண்டுப்பேருக்கும் சேர்த்து  ஐந்து பிள்ளைகள்  ஆக . 
பாட்டி வீட்டில் நல்ல நாள்  என்றால்,
சத்தம் மகிழ்ச்சி  மற்றும் இதில் பாட்டியின்  மூத்தவளின்  மகளுக்கு  வேறு இரண்டுக் குட்டீஸ் .சொல்லவே வேண்டியதில்லை . அந்த நீள தெருவிலேயே  இவர்கள்  வீட்டில்  தான்  இதுப் போன்ற நிகழ்ச்சிகள்  நடப்பதுப்போல் இருக்கும்.சில நேரங்களில்  பாட்டியும்   அம்மாவும்  அடித்துக்கொள்வார்கள். 

பின்பு திரும்பிப் பார்பதற்குள் சேர்ந்து விடுவார்கள், என இப்படி இருக்கும்.
அவன் ஊருக்கு வந்த காரணம்  
இரண்டாவது மாமாவின்  கல்யாணம் .பெண்ணை  பின்னாளில் தேடி .
 இந்நாளில்  கண்டுபிடிப்பதுப்போல்  ஒரு  பெண்ணைத்  தேடி  பிடித்து  கல்யாணத்தை  நடத்த ஆரம்பித்தார்கள். அந்தப்பெண் பார்க்க  குண்டாக இருப்பாள். கல்யாணத் தேதியை  நெருங்க  நெருங்க  வீட்டில் கலைக்கட்ட ஆரம்பித்தது.



பெரியாம்மாவீட்டு  "செட்டு" பாட்டி வீட்டிற்கு  வந்தது .
பாட்டு விளையாட்டு  என  பாட்டிவீடு  கல்யாண வீடாக மாறியது. சித்தி 
 பெரியம்மா  என அவனின்   அம்மா , அக்கா,   தம்பி  என கூட்டம் போட்டு  சிரித்து  சந்தோசம்  அரங்கேறியது.அவனுக்கு  உள்ளே  ஏதோ ஒரு ஆனந்தம்  கடல்  அலைப்போல்     மேலேஏறி
 கீழே இறங்கிக் கொண்டு இருந்தது.

ஏய் இங்கே வா! என்று அழைத்த  மாமனின் பேச்சை  கேட்டவாறு கடைக்கு போயி வந்தான். 
பகல் சூரியன் மறைந்து  இரவு காதலியான நிலா வந்தது.

இரவின் குளிரும்  வண்டியின் வேகமும் காற்றை மோத ?
 குளிர் காதை உரச என்னமோ !மாதிரி இருந்தது அவனுக்கு . 

வானத்தைப்  பார்த்தான் நிலவு  புதிதாக  பார்ப்பதுப்போல் இருந்தது. இரவுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய  மருதானி  போட்டுக்கொண்டு  இருந்தார்கள். 

சிரித்துக்கொண்டே அங்கு நானும் சென்று போய் உட்கார்ந்தேன். இரண்டாவது  சித்தியும்  அவனும் " மாமாவின்  இளைய மகள் , அமர்ந்து  மருதாணிப்  போட்டுக்கொண்டு இருந்தார்கள்.தூரத்து  கிராமத்தில்  இருந்து வந்த  இரண்டு  பெண்கள்  கல்யாண வேலைக்கு ஒத்தாசையாக 
இருக்கட்டும்  என பாட்டி  அழைத்து இருந்தாள். 
இவர்கள் எல்லாம் மருதாணி  போட்டுக்கொண்டு இருக்கும் பொழுது 
ஒத்தாசைக்கு  வந்த இருபெண்களில்  ஒருவர் மூதாட்டி இன்னொருவர் 40 வயதைக் கடந்து இருந்தாள்.
அந்த பதுமைப்பெண் தனது கிராமத்து பாசையில் "பத்திக்கிச்சா " என்று மருதாணியின் சாயத்தைப் பற்றிக்கேற்க ,. புதிதாக இருந்ததை நினைத்து  சிரித்துக்கொண்டே உறங்கினோம்.

 மறுநாள்  சூரியன் உதிக்க  காலையில்  ஒவ்வொரு குடும்பமாக  தொட்டி கட்டிருக்கும் "பாத்ரூமில் ",  குளித்து  வந்துக்கொண்டிருந்தார்கள்.





 அவனும் பார்த்து  பின்பு குளித்து  தயாராகி  அனைவரும்  வேனில் ஏறி கல்யாண மண்டப்பத்திற்குள் மாப்பிள்ளை வீட்டாராக கம்பீரமாய்ச் சென்றார்கள்.


நாங்களும் சென்றோம். காலை சிற்றுண்டியை  முடித்துக்கொண்டு இருக்கும்போதே  சித்தி  இளைய சித்தி வெகுண்டு எழுந்தாள்! காரணம்  மாப்பிள்ளையை மற்றும் அல்ல   'மா' வீட்டார் அனைவருக்கும்  கவனிப்பே  
சரியில்லை.அருகில் இருந்த உறவினர்கள்  சத்தத்தைக் கேட்டு சித்தியை "ஆஃப்" செய்து   அமர்த்தி  கல்யாண மண்டபம் கூட்டம் கூட  பந்தி ஓட ஓட ஆரம்பித்தது.கல்யாணத்திற்கு  வந்த  பெண் பிள்ளைகளை அங்கு 
 வந்த ஆண் வாலிபர்கள் சிலர்  பார்த்துக்கொண்டும் சிலர் சிரித்துக் கொண்டும்  இருந்தனர்.

நேரம்  ஆக ஆக   பந்தி ஓட ஓட  மாப்பிள்ளையும் சாப்பிட  வண்டியில்   ஏறி  வீட்டிற்கு செல்லும் வழியில்  பாட்டு. போட்டு  ஒரு  குத்துப்  போட்டு  குதூகலமாக முடிந்தது.  
அவன் மட்டும்   பெண் வீட்டாரின்  சீதனப் பொருட்கள்  வரும்  வண்டியில்  வந்து  இறங்கி  லட்டு , பலகாரங்கள் ,பிரியாணி  என எல்லாவற்றையும்  ஒரு கை  பார்த்துவிட்டு  தூங்கினான் . 
பிறகு  இரண்டு  நாற்கள்  கழித்து  சென்னைக்கு  திரும்பினான். ஆனால் , ஒவ்வொரு  முறை  ஊரை விட்டு  புறப்படும்  போதெல்லாம். ஒரு  சிறிய  வலி உண்டானது அது விலாஎலும்பிற்கும்.,  வயிற்றுக்கும்  இடையில்  என மாமாவின்
 "லோடு ஆட்டோவில்"       ஏறி 





மற்ற எல்லாக்  குடும்பமும்  கிளம்பியது.


அவனது குடும்பமும்  கிளம்பியது.




Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page